டயட் இருந்ததால் விபரீதம்!

தெலுங்கு திரையுலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் முன்னணி இயக்குநராக உருவெடுத்தார் சஞ்சனா ரெட்டி.

ராஜூ காடு என்கிற தெலுங்குப் படத்தை இயக்கிய சஞ்சனா ரெட்டி, அடுத்ததாக, பளு தூக்கும் முன்னாள் வீராங்கனையும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையுமான கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்து வருகிறார்.

இந்நிலையில் சஞ்சனா ரெட்டிக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டயட் காரணமாக திரவ உணவுகளை மட்டுமே கடந்த மூன்று நாள்களாக சஞ்சனா உண்டு வந்தார். இதனால் அவர் வீட்டில் மயக்கம் அடைந்துவிட்டார் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் கவலைப்பட ஒன்றுமில்லை, இன்று டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என கர்ணம் மல்லேஸ்வரி திரைப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால் சஞ்சனா ரெட்டியின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், வெண்டிலேட்டர் வசதியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.