நடிகை ஹன்சிக்காவுக்கு தொழிலதிபருடன் திடீர் திருமணமாம்! குழப்பத்தில் ரசிகர்கள்

நடிகை ஹன்சிகாவிற்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் என்று இணையத்தில் செய்திகள் தீயாய் பரவி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

இந்நிலையில் திருமணம் குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல ஹன்சிகா கருத்து பதிவிட்டுள்ளார்.


தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் என்ற ட்விட்டரில் செய்தியின் கீழ் ‘அடக்கடவுளே ! அவர் யார் ?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ஒருவர் ”ஏன் என்கிட்ட சொல்லல”னு கேட்டதற்கு ‘எனக்கே இப்போ தான் தெரியும்’ என்று பதிலளித்துள்ளார்.

இதில் இருந்து இது போலியான வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.