தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சத்யராஜ். 80, 90களில் கொடிகட்டி பறந்து வந்தார். ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரங்களின் மூலம் தனது திரைப்பயணத்தை துவங்கி இருந்தாலும் சில இயக்குனர்கள் இவரை ஹீரோவாக நடித்தால் சிறப்பாக இருக்கும் என கதாநாயகனாக நடித்து பல வெற்றிகளை குவித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
தற்போது பல படங்களில் நடித்து பிஸியாக இருக்கும் சத்யராஜ் லாக்டவுனால் குடும்பங்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
சத்யராஜிற்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் சிபிராஜ் சினிமாவில் அறிமுகமாகி பயணத்தை துவங்கி நடித்து வருகிறார்.
அவரின் மகள் திவ்யா சுப்பையா மருத்துவ நிபுணராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் மருத்துவமனையில் நடக்கும் சில முறைகேடுகளை பிரதமரிடமும் முதல்வரிடமும் கடிதம் மூலம் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். திவ்யா பேட்டி ஒன்றில்,
’தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும். ஆனால் மருத்துவமனையில் நடத்திய ஆராய்ச்சியின் படி மருத்துவமனைக்கு வரும் பெண்களில் இரும்புச்சத்து குறைபாடு உள்ளதாக இருக்கிறது.
இதை சரிசெய்ய முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் சிறு வயதில் இருந்தே எனக்கு அரசியல் ஈடுபாடு அதிகம். அதனால் விரைவில் நான் அரசியலுக்கு வர ஜடியா உள்ளது என்றும் கூறி ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை அதிர்ச்சி அடையச் செய்தார்.
இந்நிலையில் சமீபகாலமாக திவ்யா படுமோசமான புகைப்படங்களையும் டைட்டாக இருக்கும் ஆடையணிந்து சமுகவலைத்தளத்தில் வெளியிட்டும் வருகிறார். இதை பார்த்த ரசிகள் தந்தை பெயருக்கு மாறாக இருக்கிறதே ஆடை என்று கிண்டலடித்தும் வருகிறார்கள்.