ஒளிப்பதிவாளர் கண்ணன் மரணம்…

பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் கண்ணன் (வயது 69) காலமாகியுள்ளார். இந்த தகவலை அறிந்த தமிழ் திரையுலகினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இயக்குனர் பாரதிதிராஜாவுடன் 40 க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக கண்ணன் பணியாற்றியுள்ளார்.

அலைகள் ஓய்வதில்லை, மண்வாசனை, கிழக்கு சீமையிலே, முதல் மரியாதையை போன்ற பல்வேறு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். திரைத்துறையை பொறுத்த வரையில் படத்தின் வெற்றி என்பது இயக்குனர் மட்டுமல்லாது, இயக்குனரின் மனத்தை ஒத்துச்செல்லும், இயக்கத்தின் ஒளிப்பதிவாளரும் முக்கிய பங்கு பெறுகிறார்.

ஒளிப்பதிவாளர் கண்ணன் ஒளிப்பதிவிற்க்காக பல விருதுகளை பெற்றுள்ளார். தமிழக அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதையும் 2 முறை பெற்றுள்ளார். இவர் பாரதிராஜாவின் கண்கள் என்றும் அறியப்பட்டார். இந்த நிலையில், இவர் உடல்நலக்குறைவின் காரணமாக இயற்கையை எய்தியுள்ளார். இவரது மறைவு திரைஉலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.