போதை தலைக்கேறிய நபர் திடீரென சாலையில் விழுந்து கிடக்க அவரது அருகில் யாரையும் நெருங்க விடாமல் நாய் பாதுகாத்துள்ள காணொளி தீயாய் பரவி வருகின்றது.
குறித்த பதிவு 2018ம் ஆண்டில் நடந்திருந்தது என்றாலும் தற்போது பெரிதும் பேசப்படுவதுடன், இக்காட்சி வைரலாகியும் வருகின்றது.
சாலையில் விழுந்தவரை மக்கள் எழுப்ப முயற்சிகும்போதெல்லாம் தனது எஜமானர் அருகில் நின்றுகொண்டு மக்களை பார்த்து குறைத்து அவர்களை அங்கிருந்து விரட்டியுள்ளது அந்த நாய். மக்கள் எவ்வளவோ முயற்சித்தும் நாய் அவர்களை தனது எஜமானர் அருகில் விடவே இல்லை.
இறுதியில் பொலிசார் அந்த இடத்திற்கு வந்து நாயை விரட்டி, அந்த நபரை எழுப்ப முயற்சி செய்துள்ளனர். ஆனால், அவர்களையும் அந்த நாய் அருகில் விடவே இல்லை. தனது குடிகார எஜமானர் அருகில் நின்றுகொண்டு அவரை தனது நாவினால் வருடிவிடவும், அருகில் வருபவர்களை விரட்டியும் விட்டுள்ளது அந்த நாய். அங்கு இருந்த மக்கள் நாயின் இந்த அன்பைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.