தக்காளியை ப்ரிட்ஜில் சேமித்து வைப்பவரா நீங்கள்?

தக்காளி நமது உணவில் பயன்படும் மிகவும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்று. தக்காளி இல்லாமல் சமையலா? என்ற அளவிற்கு தக்காளியின் பயன்பாடு மிகவும் அவசியமாக உள்ளது.

சரி, தினமும் உணவிற்கு பயன்படும் தக்காளியை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தலாமா? கூடாதா? இது பலருக்கும் எழும் பொதுவான கேள்விகளில் ஒன்று. சொல்லப்போனால் இது சம்மந்தமாக பல்வேறு ஆராய்ச்சிகள் கூட நடந்துவருகிறது. பொதுவாக தக்காளி என்பது காய்கறி அல்ல, ஆனால் வெயிலில் வளர்ந்த பழமாகும்.

தக்காளியை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தாலோ அல்லது சமையல் அறையில் வைத்திருந்தாலோ அதன் சுவையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படுவது இல்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மாறாக தக்காளியை நீண்ட காலமாக சேமித்து வைத்து பயன்படுத்துவதால் அதன் சுவை குறைவதாக விஞானிகள் நம்புகின்றனர்.

அதேநேரம், தக்காளியை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்தால், தக்காளி விரைவாக கெட்டுவிடுவது மட்டுமின்றி அது விரைவாக உருகும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

ஆனால் தக்காளியை குளிர்சாதன பெட்டியில் வைப்பதற்கு பதிலாக, வெளியே வைப்பதன் மூலம் தக்காளி விரைவாக கெட்டுவிடாது என்று சிலர் கண்டறிந்துள்ளனர்.