குரல்வழி கட்டளைகள் மூலம் ஒன்லைன் ஊடாக கேள்விகளுக்கு ஏற்ற பதில்களை வழங்கியும், ஏனைய செயற்பாடுகளையும் மேற்கொள்ளக்கூடிய வசதியை Google Assistant தருகின்றது.
இச் சாதனத்தில் தற்போது Voice Match எனும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் 6 நபர்களுடைய குரல்களை ஒரே ஸ்பீக்கரில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விருப்பத்திற்கு ஏற்ப ஒழுங்குபடுத்தப்பட்ட பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளவும் முடியும்.
இதேவேளை தற்போது கூகுள் நிறுவனம் Covid-19 தொடர்பான தகவல்களை தனது 3 சேவைகளின் ஊடாக வழங்கிவருகின்றது.
இதன்படி Google Search, Google Assistan மற்றும் Google Map என்பவற்றினூடாக இது தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.