மனிதனுக்கு சளி பிடிப்பது என்பது சாதாரணமான விஷயம் தான், அதுவே நாட்கள் போக, போக நெஞ்சு சளியாக மாறினால் அது ஆபத்தில் போய் முடிய வாய்ப்புள்ளது.
நாம் அந்த நெஞ்சு சளியை கவனிக்காமல் விட்டு, நாள்பட, நாள்ட அது நிமோனியா போன்ற நோய்களை ஏற்படுத்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
இதனால் நெஞ்சு சளியால் அவதிப்பட்டு வரும் நபர்களுக்கு ஒரு எளிமையான பாட்டி வைத்தியம் உள்ளது.
மருத்துவரிடம் சென்று மாத்திரை சாப்பிட்டும், பல மருந்துகள் எடுத்தும், அது குணமாகாமல் இருந்தவர்கள், இந்த வைத்தியத்தை முயற்சி செய்து பார்த்து சரியாகியிருப்பதாக கூறுகின்றனர்.
அது ஏன் ஒரு சில பேருக்கு மாத்திரை சாப்பிட பிடிக்காது, ஒரு சில பேருக்கு கசாயம் பிடிக்காது, ஆனால் முட்டை பிடிக்காத நபர்கள் இப்போது இருக்க முடியுமா? அப்படி இருந்தால் அது மிகவும் அரிதாகவே இருக்கும்.
அப்படி அந்த முட்டையை வைத்து நாம் எப்படி இந்த நெஞ்சு சளியை விரட்டலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- மிளகு(5 முதல் 9 வரை)
- நாட்டுக் கோழி முட்டை(1)
செய்முறை
- முதலில் அந்த மிளகினை நன்றாக பொடி செய்து கொள்ளுங்கள். கடையில் பொடி செய்யப்பட்ட மிளகை வாங்க வேண்டாம். ஏனெனில் அதில் கலப்படம் எதுவும் இருக்கலாம், இதனால் உங்கள் கைகளாலே மிளகை நன்றாக பொடி செய்து கொள்ளுங்கள்.
- அதன் பின் நாட்டு கோழி முட்டையை தண்ணீரில் சிறிதளவு சூடு செய்து கொள்ளுங்கள், அந்த முட்டை வேகக் கூடாது.
- சூடான முட்டையின் மேல் பாகத்தில் இருக்கும் ஓட்டை எடுத்துவிட்டு, அதன் மேலே மிளகு பொட்டியை போட்டு, ஸ்பூன் வைத்து நன்றாக கலக்கிவிடுங்கள்.
- இறுதியாக இப்படி கலக்கிய முட்டையை சிறிது சூடாக இருக்கும் போதே குடித்துவிடுங்கள்.
- தினமும் காலை 4 அல்லது 5 நாட்கள் குடிக்கும் போது, நெஞ்சில் இருக்கும் அனைத்து சளியும் வெளியேறிவிடும்.