பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் இரு நாட்களுக்கு முன்பு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பை வீட்டில் நேற்று மதியம் அறையில் இவர் தற்கொலை செய்து கொண்டார்.
சுஷாந்தின் தற்கொலைக்கு முழுமையான காரணம் இன்னும் தெரியவில்லை. மும்பை காவல்துறையினர் மிகவும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது மரணம் தற்கொலை தான் என காவல்துறையினர் உறுதியாக தெரிவித்துவிட்டனர்.. இருப்பினும், இந்த தற்கொலைக்கு காரணம் என்னவென்று சரிவர தெரியவில்லை.
உண்மையில் அவரது தற்கொலைக்கு மன அழுத்தம் தான் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கின்றதா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் தற்போது சுஷாந்த் சிங் காதலியான ரியா சக்ரபர்த்தியிடம் விசாரணை செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், ரியா சுஷாந்த் சிங்கின் காதலி என்று அவர்கள் எங்கும் அவர் உறுதியாக தெரிவிக்கவில்லை. ஊடகங்களில் அதுபோல செய்திகள் வெளியாகிவந்தன. இவர்கள் இருவரும் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவ்வப்போது கிசுகிசுக்கு ஆளானது.
இன்று சுஷாந்த் சிங் உடலை பார்க்க ரியா மருத்துவமனைக்கு வந்து சென்றார். மும்பை காப்பர் மருத்துவமனையில் இருந்த சுஷாந்த்தின் உடலை பார்த்துவிட்டு திரும்பிய அவர் கண்ணீரோடு காரில் ஏறிய புகைப்படம் வைரல் ஆகி வருகின்றது. அவரிடம், போலீசார் ‘உங்களிடம் சுஷாந்த் சிங் என்ன சொன்னார்? சுஷாந்த் சிங் தற்கொலைக்கு காரணம் என்ன? அவருக்கு உடல் மற்றும் மன ரீதியான பிரச்னை குறித்து நீங்கள் எந்த அளவில் தெரிந்து வைத்துள்ளீர்கள்.? வேறு ஏதேனும் அழுத்தம் இருந்ததா? என துருவி துருவி விசாரணை நடத்தியுள்ளனர்.