குறுகிய வீடியோக்களை பயன்படுத்தி டப்பிங் செய்யக்கூடிய அப்பிளிக்கேஷனாக TikTok காணப்படுகின்றது.
உலகளவில் மிகவும் பிரபல்யமான இந்த அப்பிளிக்கேஷனை ByteDance நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இந்நிறுவனம் கடந்த 12 மாதங்களில் அமெரிக்க கிளைக்கான தனது பணியாளர்களை 3 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி முன்னர் 300 பணியாளர்கள் இருந்த நிலையில் தற்போது 1,000 வரையான பணியாளர்களைக் கொண்டுள்ளது.
அமெரிக்காவின் மவுன்டன் வியூ, கலிபோர்னியா மற்றும் நியூயோர்க் போன்ற இடங்களில் தனது கிளைகளை ByteDance கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த பணி அதிகரிப்பானது ஆய்வு, டெவெலொப்மென், தரவுப் பாதுகாப்பு, கிரியேட்டர் டீம் மற்றும் விற்பனை குழு என்ற வகைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.