சுஷாந்த் மரணத்திற்கு முன்னணி நடிகர் மீது வழக்கு பதிவு…!

சுஷாந்த் நம் தமிழக மக்களுக்கு தோனியாக மட்டுமே தெரியும். அந்த அளவிற்கு தோனி கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார்.

இந்நிலையில் சுஷாந்த் நேற்று மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்பட்டது.

இதை அறிந்த ஒட்டு மொத்த திரையுலகமும் கடும் அதிர்ச்சி தான், இந்த சிறிய வயதில் ஏன் இப்படி ஒரு முடிவை சுஷாந்த் எடுத்தார் என்று எல்லோருமே அதிர்ச்சியாகினார்கள்.

தற்போது சுஷாந்த் அவர்களின் இறப்பு குறித்து நடிகை கங்கனா கடுமையாக சாடியுள்ளார்.

இதில் குறிப்பாக பாலிவுட்டில் அவரை தொடர்ந்து ஓரங்கட்டி ஸ்டார் கிட்ஸுகளை மட்டும் கொண்டாடி வந்ததை சொல்லி கடுமையாக திட்டியுள்ளார்.

தற்போது சல்மான் கான், கரன் ஜோகர் என 8 பேர் மேல் சுஷாந்த் தற்கொலைக்கு சுதீர் குமார் ஓஜா என்பவர் வழக்க தொடர்ந்துள்ளார்.