1500 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

கொரோனா தொற்று ஏற்படுத்தியுள்ள தற்போதைய சூழ்நிலையின் விளைவாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் சுமார் 1500 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் தற்போது சுமார் 7,000 பேர் பணியாற்றுகின்றனர்.

சுமார் மூன்று மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவியமை காரணமாக நிறுவனத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக, செலவினங்களைக் குறைக்க ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்கவும் ஓய்வு பெறவும் நடவடிக்கை எடுத்துள்ளது.