பொதுத் தேர்தலின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புகைப்படங்களை பயன்படுத்த தடை

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புகைப்படங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சாரங்களுக்கு ஜனாதிபதியின் புகைப்படங்கள், பெயர் மற்றும் பதவியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனை அறிக்கைக்கு அமைய இந்த விடயம் வெளியாகியுள்ளது.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜனாதிபதி கோட்டாபயவின் பெயர், பதவி மற்றும் புகைப்படங்களை அவர்களின் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்துவதற்கு அக்கறை காட்டியமையினால் இந்த கோரிக்கை விடுக்கப்ட்டுள்ளது.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சிகள் அல்லது சுயாதீன வேட்பாளர்கள் உட்பட எவரும் தனது பெயர், பதவி புகைப்படத்தை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய விரும்பவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.