கொரோனா நோய் தொற்றால் பலரின் வாழ்க்கை பொருளாதாரம் பெரும் சிக்கலை சந்தித்துள்ளது. பலரும் வேலை வாய்ப்பை இழந்துள்ளார்கள். இதில் சினிமா ஊழியர்களின் குடும்பமும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளது.
அண்மையில் ஹிந்தி சினிமாவை சேர்ந்த நடிகை நுப்புர் அலங்கார் தான் மிகவும் வறுமையில்
இருப்பதாகவும் தன்னுடைய அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை என்றும் சிகிச்சைக்கு பணமில்லாமல் தவிப்பதாகவும் கூறி தன் தோழியான நடிகை ரேணுகா மூலம் சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டு உதவி கேட்டிருந்தார்.
இந்நிலையில் பலருக்கும் உதவிகள் செய்து வரும் பிரபல நடிகர் அக்ஷய் குமார் நடிகையின் தாய்க்கு சிறப்பான சிகிச்சைக்கான வசிதகளை செய்து உடனே உதவி செய்துள்ளார்.
இதற்கான நன்றியை கூட அக்ஷய் ஏற்கவில்லை என நுப்புர் தெரிவித்துள்ளார்.