கூகுள் செயற்பாடுகளை முற்றாக நீக்குவது எப்படி?

கணினிகளில் பெரும்பாலானவர்கள் குரோம் உலாவியினையே பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் கூகுள் கணக்குகளே அதிளவில் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றில் கூகுளில் தேடும் விடயங்கள் உட்பட அன்றாட செயற்பாடுகள் அனைத்தும் பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கும்.

எனினும் இவற்றினை நீக்கக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.

இவ் வசதியினைப் பெறுவதற்கு கூகுள் கணக்கினுள் லொக்கின் ஆகி Manage your Google Account என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

தொடர்ந்து இடது பக்க மேல் மூலையில் உள்ள Data & personalization என்பதில் கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் Activity and timeline என்பதன் கீழ் உள்ள My Activity இனை தெரிவு செய்ய வேண்டும்.

அதன் பின்னர் Delete activity by என்பதை கிளிக் செய்து All time என்பதை தெரிவு செய்த பின்னர் Delete என்பதை கிளிக் செய்யவும்.