தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடித்து வெளிவந்த சந்திரலேகா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை வனிதா. பிரபல நடிகர் விஜய குமாரின் வாரிசு நடிகையாக அறிமுகமானார்.
சந்திரலேகா படத்திற்கு பிறகு படவாய்ப்புகள் அமையாததால் 2000 ஆண்டு நடிகர் ஆகாஷ் என்பவரை குடும்பத்தினரின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் ஒரு மகன் மற்று மகளை பெற்றெடுத்தார்.
சில காரணங்கள் இருவருக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டு 2007ல் விவாகரத்து பெற்றார். இதையடுத்து அதே ஆண்டில் ஆந்திராவை சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து மூன்றாவது பெண் குழந்தையை பெற்றார்.
இத்திருமண வாழ்க்கையும் சரிபடாமல் மூன்று ஆண்டுகளில் 2010ல் விவாகரத்து பெற்றும் குடும்பத்துடன் சண்டை போட்டு தனியாக வாழ்ந்து வந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி செலவதற்கு முன்பே நடன இயக்குநரும் நடிகருமான ராபர்ட் மாஸ்டரை காதலித்து தொடர்பில் இருந்து வருகிறார் என்று சில வதந்திகள் பரவினர். இதை அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து உறுதி செய்தார்.
இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் ராபர்ட்டைமூன்றாவதாக மறுமணம் செய்யப்போவதாக செய்திகள் வைரலாகி வருகிறது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.