பிரம்மாண்ட சீரியல் பிரபல நடிகைக்கு குழந்தை பிறந்தது!

சீரியல், சினிமா பிரபலங்களின் குடும்பங்கள் பற்றிய செய்தி என்றால் பலரின் கவனத்தை மிகவும் பெறும். அந்த வகையில் குழந்தை பிறந்த செய்தி அனைவருக்கும் மகிழ்ச்சியான ஒன்றே.

தற்போது பிரபல சீரியல் நடிகை ஷிகா சிங்கிற்கு குழந்தை பிறந்துள்ளதாம். ஹிந்தியில் கும்கும் பாக்யா என்ற சீரியலில் ஆலியா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்.

அதே போல பிரம்மாண்ட சீரியலான மகாபாரத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். இந்த சீரியல் தமிழிலும் டப் செய்யப்பட்டு ஒளிப்பரப்பானது.

விமானியை அண்மையில் அவர் திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவருக்கும் குழந்தை பிறந்துள்ள செய்தியை இன்ஸ்டாகிராம் வழியே அனைவருக்கும் அறிவிக்க பலரும் வாழ்த்தியுள்ளார்கள்.