இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அந்தவகையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 926ஆக அதிகரித்துள்ளது.
தற்போது தொற்று கண்டறியப்பட்ட 2 பேரில் ஒருவர் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகைதந்தவர் எனவும் மற்றையவர் ரஷ்யாவில் இருந்து வந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரை ஆயிரத்து 421 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 11 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.