சுரேஷ் ரெய்னாவின் வாழ்க்கை வரலாற்று படம் – ஹீரோ யார்?

பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்கள் பயோபிக் படங்களாக எடுக்கப்படுவது சினிமாவில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அவ்வாறு சமீபத்தில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘மகாநதி’ கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது.

அதன்படியே, கிரிக்கெட் வீரர் தோனியின் வரலாற்று படமான எம்.எஸ்.தோனி மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்தது.

இந்நிலையில் ருவிட்டர் தளத்தில் ரசிகர்களால் ‘சின்ன தல’ என்று செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவிடம் ரசிகர் ஒருவர் ‘உங்களது வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் உருவாக்கினால், அதில் யார் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அல்லது நீங்களே நடிப்பீர்களா?’ என்று ளே்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா எனக்கு துல்கர் சல்மான் அல்லது ஷாஹித் கபூர் நடிக்க வேண்டும் என்று விருப்பம். நீங்கள் யாரை சொல்கிறீர்கள்?’ என்று பதிலளித்துள்ளார்.