சீனாவில் உள்ள லூங் ஏர்லைன்ஸ் விமானத்தில் லி(29) என்ற பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். போதையில் இருந்த அவர், திடீரென அவர் அமர்ந்திருந்த பகுதியில் உள்ள கண்ணாடி ஜன்னலை வேகமாக உடைத்தார். அதனை கண்ட விமான பணியாளர்கள், அதிர்ச்சியடைந்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே, வேகமாக மத்திய சீனாவின் ஹெனான் தலைநகரில் உள்ள ஜெங்ஜோ சின்ஜெங் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.
இதுகுபற்றி விமான பாதுகாப்பு அதிகாரி கூறுகையில், ‘அந்த பெண் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாகவே அளவுக்கு அதிகமாக மது குடித்திருந்தார். போதையில் தனது கட்டுப்பாட்டை இழந்து ஜன்னல் கண்ணாடியை உடைத்துவிட்டார்.
அந்த பெண்ணின் காதலன், அவரது காதலை புரிந்துக்கொள்ளாமல் புறக்கணித்திருக்கிறார். இதனால் மனமுடைந்து போதையில் ஜன்னல் கண்ணாடியை உடைத்துள்ளார். அவர் குடித்த மதுபானத்தில் ஆல்கஹாலின் அளவு 35 முதல் 60 சதவீதம் வரை இருந்தது.
அதிர்ஷ்டவசமாக, விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது சம்பவம் நடந்ததால், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது அவரை கைது செய்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.