இறப்பதற்கு முன்பு சுஷாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், இறப்பதற்கு மூன்று நாள்களுக்கு முன்பாக தன்னுடைய வேலையாட்கள் அனைவருக்கும் சம்பளத்தை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

நடிகர் சுஷாந்த் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், அவர் தூக்கிட்டே தற்கொலை செய்துகொண்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

ஆனாலும் மும்பை மாநகர பாந்த்ரா பொலிஸார் சுஷாந்தின் தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சுஷாந்த் தன்னுடைய வேலையாட்கள் அனைவருக்கும் இறப்பதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு சம்பளத்தை வழங்கியுள்ளார்.

மேலும் அவர்களிடம், இனிமேல் என்னால் சம்பளம் தர முடியாது, அதற்கான சூழலும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சுஷாந்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் தொடர்பு கொண்டு, வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க சுமார் ரூ.14 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

ஆனால் துரதிருஷ்டவசமாக திஷாவும் தற்கொலை செய்து கொள்ளவே, ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த சுஷாந்துக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்ததாக வேலையாட்கள் தெரிவித்துள்ளனர்.

இதனாலேயே இறப்பதற்கு சில நாள்கள் முன்பு வரை சுஷாந்த் பெரும்பாலும் தனிமையிலேயே இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.