முக்கிய சீரியலில் திடீர் மாற்றம்!

உலகம் முழுக்க கொரோனா நோய் தொற்று 85 லட்சம் பேரும் ஏற்பட்டுள்ளது. இதுவரை இறந்தவர்கள் 4 லட்சத்திற்கும் அதிகமானோர்.

சினிமா, சீரியல் வட்டாரத்திலும் இந்நோய் தொற்று பரவல் நடவடிக்கையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்புகள் அண்மையில் சில நிபந்தனைகளுடன் சின்னத்திரைக்கு மட்டும் அனுமதி வழங்கியது.

இந்நிலையில் சீரியல் படப்பிடிப்புகள் தொடங்கின. சன் டிவியில் நடிகை ரேவதி, தலைவாசல் விஜய் நடித்து வந்த அழகு சீரியல் தற்போது மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளது.

இதில் நடிகர் அவினாஷ் தற்போது நடிகை ஊர்வசியுடன் போட்டோ எடுத்து பகிர்ந்துள்ளார். அழகு சீரியல் சுவாரசியமான கதையுடன் வருகிறது, காத்திருந்து பாருங்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும் ரேவதிக்கு பதிலாக ஊர்வசி நடிக்கிறார் என மறைமுகமாக சொல்லப்பட்டு வருகிறது.