மலையாள பெண்ணாக பிறந்து பிறகு ஒருசில படங்கள் மூலம் நடிகையாக நடித்து அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகன். தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது தளபதி நடித்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் படம் மாஸ்டர்.
மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் ஜோடியாக நடித்ததன் மூலம் பெரிய அளவில் வெற்றியை பெறாததால் அவருக்கும் படவாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பேட்ட படத்தின் மூலம் மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. மாஸ்டர் படத்திற்கு பிறகு டாப் ஹீரோயினாக வலம் வருவோம் நினைத்து பட வாய்ப்பிற்காக காத்திருக்கிறார். மாஸ்டர் படம் வெளியான பிறகு தான் மற்ற படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையில் தெலுங்கு முன்னணி நடிகரான ரவிதேஜாவின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். அது மட்டும் இல்லாமல் ஓரளவு கணிசமான சம்பளமும் பேசப்பட்டுள்ளது.
இதை பயன்படுத்தாமல் மாஸ்டர் படத்திற்கு பிறகு மார்க்கெட் அதிகமாகும் என்று எண்ணி சம்பளத்தினை உயர்த்தியுள்ளார். அப்போதுதான் சம்பளத்தை சடாரென உயர்த்த முடியும் என கணக்குப் போட்டு வருகிறாராம்.
மாஸ்டர் படத்திற்காக தற்போது வரும் வாய்ப்புகளை இழக்கிறாரா என ஆதங்கப்படுகிறது சினிமா வட்டாரம். தற்போது மாஸ்டர் படம் எப்போது ரிலீஸாகும் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்து வருகிறது.