ஹிந்தியிலும் ரீமேக் ஆகவுள்ள சூர்யாவின் சூரரை போற்று..!!

நடிகர் சூர்யா காப்பான் திரைப்படத்திற்கு பின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்து முடித்தார்.

மேலும் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையயே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் வெளியிடும் கொரோனவால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தை ஹிந்தியிலும் உருவாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்தின் ரீமேக்கில் நடிகர் ஷாஹித் கபூர் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.