பிரபுதேவா கூறிய கடைசி வார்த்தை… பிரிந்து சென்ற நயன்தாரா?

நடிகை நயன்தாரா பிரபுதேவாவுடனான பிரிவு குறித்து ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகை நயன்தாரா இயக்குனரும் நடிகருமான பிரபுதேவாவை காதலித்து வந்ததும், இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவை எடுத்த பின், சில தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக பிரிந்து சென்றது அனைவரும் அறிந்தது தான்.

சில வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டி ஒன்றில், ஏன் பிரபுதேவாவை விட்டு பிரிந்தேன் என்பதை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரும், கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளாக காதலித்து, சில வருடங்கள் ஒரே வீட்டில் கூட வசித்து வந்தனர்.

பலமுறை நயன்தாரா பிரபுதேவா மீது உள்ள காதலை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதே போல் பிரபுதேவாவும் நயன்தாராவுடன் வெளியிடங்கள் மற்றும் திரைப்பட நிகழ்ச்சிகளுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

இதனால் கடந்த 2009 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்து விட்டதாகவும் சில வதந்திகள் வெளியானது.

விதியின் வசமாக சில பிரச்சனைகளும் இருவருக்கும் வந்தது. அதை மீறி ஒன்றாக வாழ்வது என்பது சாத்தியம் இல்லை என பிரபுதேவா தெரிவித்ததால், மறு கனவே பிரிவது என முடிவெடுத்து விட்டதாக தெரிவித்துள்ளார் நயன்தாரா.