‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் அஸ்வின். தயாரிப்பாளரான எல்.எம்.எம் சுவாமிநாதனின் மகன் தான் இந்த அஸ்வின். முப்பொழுதும் உன் கற்பனைகள், வந்தான் வென்றான், நய்யாண்டி, நெடுஞ்சாலை ஆகிய பல படங்களில் நடித்திருக்கின்றார்.
கும்கி படத்தில் நடித்த கதாபாத்திரம் மிகவும் பிரபலமடைந்தது எனவே, தன்னுடைய பெயரை கும்கி அஷ்வின் என்று அவர் மாற்றிக்கொண்டார். தொடர்ந்து பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கி௯றார் அஷ்வின்.
இந்த நிலையில், அவருடைய காதலியை விரைவில் அஸ்வின் திருமணம் செய்ய இருக்கின்றார். அமெரிக்காவில் படித்த வித்ய ஸ்ரீயும், அஸ்வினும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். விரைவில் இருவரின் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய இருக்கின்றனர்.
தற்போது கரோனா சூழல் காரணமாக நிச்சயதார்த்தம் எளிய முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. வருகின்ற ஜூன் 24ஆம் தேதி அஸ்வினுடைய வீட்டில் திருமணம் மிக எளிமையான முறையில் நடைபெற இருக்கின்றது.