பிரபல தொலைக்காட்சி தூர்தர்ஷன் பொதிகையில் 25 வருடங்களுக்கு மேலாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் பாத்திமாபாபு. இவர் ஜெயா டிவியிலும் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
அதன் பின்னர் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் இவர் நடித்து இருப்பார். பார்த்தேன் ரசித்தேன், முகவரி, நேருக்குநேர், விஐபி உள்ளிட்ட ஏராளமான படங்களில் இவர் பிரபலமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பங்கேற்ற சில நாட்களிலேயே பாத்திமாபாபு வீட்டை விட்டு வெளியேறினார். ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருக்கும் பாத்திமாபாபு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.
இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் பாத்திமா பாபு கால்களை வளைத்து யோகா செய்து இருக்கின்றார். இந்த வீடியோ ஆச்சர்யத்தை தரும் வகையில் அமைந்துள்ளது. இதனை, இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.