இயக்குனர் கௌதம் மேனனை அண்மையில் போலிஸ் அதிகாரியாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் பார்த்தோம். பல நல்ல ஹிட் படங்களை இயக்கியவர் வெப் சீரிஸ்களையும் தயாரித்து வருகிறார்.
அண்மையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் விதமாக Queen என்ற வெப் சீரிஸை தயாரித்திருந்தார்.
அடுத்தாக மதக்கம் என்ற வெப் சீரிஸை தயாரிக்கிறாராம். திருடன் போலிஸ் கதை போல இந்த சீரிஸ் இருக்குமாம். இதை Queen சீரிஸை இணைந்து இயக்கிய பிரசாந்த் முருகேசன் இயக்குகிறார்.
இவரே சசிகுமார் நடித்த கிடாரி படத்தையும் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. பி.சி.ஸ்ரீராம் இந்த வெப் சீரிஸை ஒளிப்பதிவு செய்கிறாராம்.