அதிசக்திவாய்ந்த சூரிய கிரகணம் என்று இந்த கிரகண காலத்தை சொல்வதால், முதலில் இதை கண்டு யாரும் அஞ்ச வேண்டாம். இயற்கையாக நடக்கும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. ஆனால், முடிந்தவரை இந்த கிரகண நேரத்தில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இந்த வருடத்தின் மிகப்பெரிய சூரிய கிரகணம் என்று சொல்லப்படும் இந்த கிரகண நேரத்தில், என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த சூரிய கிரகணம் நெருப்பு வளையத்திற்குள் நிகழப் போவதாக அறிவியல் ஆராய்ச்சியாளர்களால் சொல்லப்பட்டுள்ளது. மிக நீண்ட நேரம் நடக்கக்கூடிய இந்த கிரகணமானது இன்று காலை 10.22 மணியிலிருந்து மதியம் 01.42 மணிவரை நிகழவிருக்கிறது. இந்த நேரத்தில் கட்டாயம் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது. வெறும் கண்களால் சூரியனை பார்க்கக்கூடாது. அப்படி பார்க்கும் பட்சத்தில், கிரகணம் வெறும் கண்களில் தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது