கொரோனா சினிமா வட்டாரத்தை பெரிதளவில் முடக்கியுள்ளது. படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் பெரும் நஷ்டம் அடைந்துள்ளது.
சினிமா ஊழியர்கள் பல வேலை வாய்ப்பை இழந்துள்ளதால் வயிற்று பிழைப்புக்கான மாற்று வழியை ஏற்படுத்த தயாராகிவிட்டனர்.
சினிமா நடிகர்கள், நடிகைகள் படப்பிடிப்புகள் இல்லாததால் வீட்டில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் சினிமாவில் ஒரு நேரத்தில் முக்கிய நடிகையாக வலம் வந்த மாளவிகா தற்போது ஃபேஸ் ஆப் மூலம் தன்னை ஆணாக மாற்றி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இதனை கண்ட ரசிகர்கள் அவரா இது என மிகுந்த ஆச்சர்யத்தில் இருக்கிறார்கள்.