அமர காவியம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் மலையாள நடிகை மியா ஜார்ஜ். பின் இன்று நேற்று நாளை, வெற்றி வேல், ரம், எமன் படங்களில் நடித்திருந்தார்.
விக்ரமுடன் கோப்ரா படத்திலும் அவர் நடித்து வந்தார். கடந்த வருடம் இவரின் நடிப்பில் மலையாளத்தில் பிரதர்ஸ் டே, டிரைவிங் லைசென்ஸ் ஆகிய படங்களும் வெளியாகின.
அண்மையில் இயக்குனர் சச்சி மாரடைப்பால் காலமானார். இடுப்பு எலும்பு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
இந்த சோகத்தால் நிவின் பாலி, பிரித்வி ராஜ், துல்கர் சல்மான் என பலர் இரங்கல் தெரிவித்தனர். மியா நடித்திருந்த டிரைவிங் லைசென்ஸ் படத்திற்கு கதை எழுதியது சச்சி தான்.
இந்நிலையில் மியா இன்னும் என்னால் சச்சி அண்ணன் இந்த உலகை விட்டு சென்றதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரின் ஆசிர்வாதத்துடன் என்னுடைய பட வேலையை அப்போது முதல் இப்போது வரை தொடங்கி வருகிறேன்.
ஒவ்வொரு படங்களும் ஒரு அழுத்தத்தை என்னுள் ஏற்படுத்தியுள்ளன. சச்சி அண்ணன் எப்போதும் என்னை அவரின் இளைய தங்கையாகவே பார்ப்பார்.
டிரைவிங் லைசென்ஸ் படத்தின் பிரிமியர் காட்சியை இப்போதும் நினைத்து பார்க்கிறேன். அய்யப்பனும் கோஷியும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை அவருடைய போனில் போட்டு காண்பித்தார், கடைசி சில நாட்களில் அவர் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். அவரின் குரல் இன்னும் எனக்கு கேட்கிறது. உங்களுடைய போராட்டமான இந்த நாட்கள் நாங்கள் பிரார்த்தனைகள் செய்தோம். ஆனால் அவை உங்களை காப்பாற்றவில்லை. உங்களை போன்ற சினிமாக்காரன் இல்லை. உங்களை மிகவும் மிஸ் செய்கிறோம் என கூறியுள்ளார்.