தமிழகத்தில் 15 வயது சிறுமி கர்ப்பமான நிலையில் அது தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (54). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் வீட்டில் ஒரு பாட்டி வேலை பார்த்து வந்தார்.
இவரது 15 வயது பேத்தி அடிக்கடி பால்ராஜ் வீட்டுக்கு சென்று பாட்டிக்கு உதவி செய்து வந்திருக்கிறார்.. பாட்டியுடனேயே சிறுமி வசித்து வந்ததால், பால்ராஜ்-க்கு இது சாதமாக போய்விட்டது.
ஒரு வருடத்துக்கும் மேலாக சிறுமியின் சூழலை பயன்படுத்திக் கொண்டு அவரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இந்த விடயத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டலும் விடுத்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தான் கர்ப்பமானதை உணர்ந்த சிறுமி ஒரு வருடமாக நடந்த கொடுமைகளை பாட்டியிடம் சொல்லி அழுதுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பாட்டில் பொலிசில் உடனடியாக புகார் கொடுத்த நிலையில் பொலிசார் பால்ராஜை கைது செய்துள்ளனர்.