மாஸ்டர் பாடலுக்கு மாஸான நடனம்! வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமா ரசிகர்களால் தளபதி என கொண்டாடப்படுபவர் விஜய். அவருக்கு இன்று பிறந்த நாள். அனைத்து ரசிகர்களும் வீட்டிலிருந்த படியே சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

கொரோனாவால் ஊரடங்கு நிலவி வருவதால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. எடுத்து முடிக்கப்பட்ட சில படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.

மாஸ்டர் படமும் இறுதி கட்ட நேரத்தில் கொரோனாவால் படம் வெளியாகாமல் தடையானது. இதனால் படப்பிடிப்பை தீபாவளிக்கு படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளனர்.

இதற்கிடையில் விஜய்யின் பிறந்த நாளான இன்று மாஸ்டர் பாடலுக்கு இளைஞர் ஒருவர் டிரெட்மில் மீது டான்ஸ் ஆடி வீடியோவை வெளியிட அது வைரலாகி வருகிறது.