உங்கள் கை அமைப்பு இப்படி இருக்கா?

மனிதர்களின் கை, கால்களில் இருக்கும் ஒவ்வொரு ரேகைகளிலும் பல அர்த்தங்கள் மறைந்துள்ளது. அதில் அனைவருக்கும் ஒரே மாதிரியான கையமைப்பு மற்றும் ரேகைகள் அமைவதில்லை.

அப்படி பார்க்கும்போது நமது கையமைப்பினை வைத்தே செல்வம், தொழில், இல்வாழ்க்கை, தனிநபர் குணாதிசயங்களை பற்றி கூறலாம். அந்த வகையில் சிற்பக் கைகள் உடையவர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும்? என பார்ப்போம்.

சிற்பக் கைகள் :

இந்த அமைப்பு உடைய கைகளின் அடிப்பாகமானது ஆரம்பத்தில் பருத்தும், மேலே செல்லச் செல்ல குவிந்து இருப்பது போன்று காணப்படும்.

கையின் நான்கு விரல்களும் இதே மாதிரி காணப்பட்டாலும், கட்டை விரல் மட்டும் சற்று குட்டையாக காணப்படும்.

குண நலன்கள் :

இவர்கள் பெரிய பெரிய திட்டங்களையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு செயல்படுவார்கள்.

உலகையே வெல்ல வேண்டும் என்று மனதளவில் நினைத்துக் கொள்வார்கள்.

சிறிது நேரம் வேலை செய்தாலே போதும் களைப்படைந்து விடுவார்கள்.

நன்றாக தூங்க விரும்புவார்கள்.

சாப்பாடு அளவுடன் சாப்பிடுவார்கள்.

இவர்களுக்கு எதிராக யார் தவறு செய்தாலும் அதை மனதில் வைத்துக் கொள்ளமாட்டார்கள்.

உடனடியாக மன்னிக்கும் மனப்பான்மை கொண்டவர்கள்.

அறிவாளிகளாகவும், பிறரை நம்பவைக்கும் அளவிற்கு பேச்சாற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

அனைவரின் மீதும் பாசத்தை காட்டி விட்டு பின்பு கஷ்டப்படுவார்கள்.

மற்றவர்களின் கஷ்டங்களைப் பார்த்து இரக்கம் கொள்வார்கள்.

இவர்களால் சுயமாக சிந்தித்து செயல்பட முடியாது. பிறரிடம் ஆலோசனை கேட்டுதான் அனைத்து காரியங்களையும் செயல்படுத்துவார்கள்.

இவர்கள் நல்ல கலை ரசிகர்கள். இவர்களில் பெரும்பாலானோர் கவிஞர், எழுத்தாளர், ஓவியர், நடிகர்களாக இருப்பார்கள்.