சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மா அறிமுகமான நாள்..!!

இந்திய கிரிக்கெட் அணியில் இன்று தவிர்க்க முடியாத வீரராக விளங்கி வருபவர் ரோகித் சர்மா.இன்று உலகம் முழுவதும் அதிக அளவில் ரசிகர்களை கொண்ட ரோகித் சர்மா,  ஆரம்ப காலகட்டங்களில் அணியில் அவருடைய இடத்தினை தக்க வைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருந்தார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான நாள் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் 23 -ம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக ரோகித் சர்மா களம் இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 2007  ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி மோசமாக தோல்வி அடைந்த வெளியேறிய நிலையில், இந்திய அணிக்கு புதிய ரத்தம் பாய்ச்ச வேண்டிய நெருக்கடியான நிலையில் இருந்தது. அதன் பிறகு வங்கதேசத்துடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு தொடரை மட்டுமே ஆடிய இந்திய அணி ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ஒரு போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் அயர்லாந்து அணியுடன் மோதியது. அன்றைய போட்டியில் தான் முதன் முதலாக சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மா களம் இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய அயர்லாந்து அணி 190 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து விளையாடிய இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.  நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த தொடரில் தான் சச்சின் கங்குலி ஜோடி தொடக்க ஜோடியாக களமிறங்கியது.

அறிமுகமான ரோஹித்திற்கு பேட்  செய்யவோ பவுலிங் செய்யவோ வாய்ப்பு கிடைக்கவில்லை. பீல்டிங்கில் நெய்ல் ஓ பிரையன் கேட்ச் பிடித்து தன்னுடைய பங்களிப்பை அளித்து இருந்தார்.  ஜூன் 23ஆம் தேதி அறிமுகமான ரோகித் சர்மாவிற்கு அடுத்த உடனடியாக செப்டம்பரில் நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பை அணியில் இடம் கிடைத்து சாம்பியன் பட்டம் வென்ற அணியில் முக்கிய பங்காற்றினார். அதற்கடுத்து ஒரு நாள் உலக கோப்பை போட்டியில் 2011ம் ஆண்டு விளையாடும் அணியில் இடம் கிடைக்காமல் வெளியேறியவர், மீண்டும் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மினி உலகக் கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் ட்ராபியில் தொடக்க  ஆட்டக்காரராக களம் இறங்கினார். இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய அவர், ஜூன் 23ம் தேதி இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் போதும் அந்த ஆட்டத்தில் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.