பச்சை மிளகாயில் நமக்கு தெரியாத பல உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது.அதனால் தான் உணவு வகைகளில் மிளகாய் பொடி சேர்ப்பதை விட, பச்சை மிளகாயை சேர்க்கின்றோம்.இவை 6000 வருடங்களுக்கு முன்பே உணவில் பயன்படுத்தப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிலும் இந்தியர்கள் பச்சை மிளகாய் உண்ணும் பழக்கத்தை அதிகமாக கொண்டுள்ளனர்.
பச்சை மிளகாயில் நமக்கு தெரியாத பல உடல் நல பயன்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் உணவிற்கு மிளகாய் போடி சேர்ப்பதை விட, பச்சை மிளகாயை உண்ணுவதே நல்லதாகும்.நாம் உணவில் பயன்படுத்தும் இந்த காரசாரமான மிளகாய் எவ்வகையான நோய்களை தடுக்கிறது என்பதை பற்றி பார்ப்போம்.
உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. ஏனெனில் இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும்.ஆகவே இந்த பச்சை மிளகாயை சேர்த்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதால், 20 நிமிடங்களிலேயே உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைத்துவிடும்.
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க பச்சை மிளகாய் உதவிடும். ஆனால் அதற்காக இனிப்பு பலகாரங்களை சாப்பிட்டு விட்டு பச்சை மிளகாயை சாப்பிட்டு கொள்ளலாம் என்று நினைக்க கூடாது.பச்சை மிளகாயில் எண்ணிலடங்கா நார்ச்சத்துக்கள் உள்ளது. தற்போது இருக்கும் பொதுவான எண்ணத்துக்கு மாறாக பச்சை மிளகாய் உட்கொண்டால், உணவு செரிமானம் வேகமாக நடைபெறும்.
மிளகாய்கள் மூளைக்குள் என்டோர்ஃபின்ஸை உற்பத்தி செய்யும். இது உங்கள் மனநிலையை நன்றாக வைத்திருக்கும். அதனால் நல்ல காரசாரமான உணவை உண்ட பிறகு ஆனந்தமாக இருக்கிறீர்கள் என்றால் அது தற்செயலாக நடப்பதல்ல மிளகாயின் செயல்திறன் தான் காரணம்.
பச்சை மிளகாயை உட்கொண்டால், நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு குறைகிறது. புகைப்பிடிப்பவர்கள் இதனை கவனிக்க வேண்டும்.பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளது. இந்த குணத்தினால் தொற்றுக்கள் ஏற்படாமல் காக்கிறது. அதுவும் முக்கியமாக சரும தொற்றுகள் நீங்க உதவி புரிகிறது.
பெண்களுக்கும், இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் மிளகாய் ஆரோக்கியமானதாகும். பச்சை மிளகாயில் இயற்கையாகவே இரும்புச்சத்து நிறைந்துள்ளது.பச்சை மிளகாயில் வைட்டமின் ”ஈ”யும் கூட அதிகமாக உள்ளது. இது சில சரும எண்ணெய் சுரப்பதற்கு உதவி புரிந்திடும். அதனால் காரமான உணவை சாப்பிட்டால் நல்ல சருமத்தை பெறலாம். நல்ல சருமம் வேண்டும் என்பதற்காக முகத்தில் பூசி விட வேண்டாம்.
பச்சை மிளகாயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மிளகாயை பயன்படுத்துவதால் மூக்கடைப்பு சரியாவதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.பச்சை மிளகாயில் உள்ள வைட்டமின் சி, நோய்களை எதிர்க்க இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.