உலகின் நீண்ட வரிசையில் இடம்பெற்ற மஹாபாரதம்.!

ரப்பர் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு ரொட்டி துண்டுகள் பென்சிலில் எழுதியதை அழிப்பதற்கு பயன்படுத்தப்பட்டன.

தைவானின் பழைய பெயர் ஃபார்மோசா ஆகும்.

நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர், இரவீந்திரநாத் தாகூர் ஆவார்.

முதன்முதலில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர் விஸ்வநாதன் ஆனந்த்.

விண்வெளிக்கு சென்ற முதல் பெண் வாலண்டினா தெரஸ்கோவா ஆவார்.

இந்திய அணியின் முதல் டெஸ்ட் கேப்டன் சி.கே.நாயுடு ஆவார்.

உலகின் முதல் பெண் பிரதம மந்திரி ஸ்ரீலங்காவின் சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆவார்.

மகாபாரதம் :

மகாபாரதம், உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு கட்டத்திலும் மனிதன் என்ன செயல் செய்தால், அவனுக்கு என்ன பலன் விளைவிக்கப்படும்? என வாழ்வியலில் புரிதல் ஏற்பட, நம் மண்ணில் நிகழ்ந்தேறிய மாபெரும் இதிகாசம் தான் மகாபாரதம்.

இராமாயணம் :

வாழ்க்கையின் தத்துவங்கள், ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய குணங்கள், சகோதார ஒற்றுமை, விதியின் வலிமை, நட்பின் மேன்மை போன்றவற்றை இராமாயணத்தின் வாயிலாக நாம் அறியலாம்.

உலக சுகாதார நாள் ஏப்ரல் 7ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இந்தியாவின் வெள்ளை புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியன் ஆவார்.

தேசிய புள்ளிவிவர தினம் ஜூன் 29ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இந்திய உருக்கு ஆணையம் 1954ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

கர்பா என்ற பிரபலமான நாட்டுப்புற நடனம் குஜராத் உடன் தொடர்புடையது.

நாணயங்களை பற்றிய ஆய்வு நாணயவியல் என்று அழைக்கப்படுகிறது.

அடால்ஃப் ஹிட்லர் ஆஸ்திரியாவில் பிறந்தார்.

ஆர்தர் வைன் என்பவர் குறுக்கெழுத்துப் புதிரை கண்டுபிடித்தார்.

டிஸ்னிலேண்ட் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் அமைந்துள்ளது.

ரோலண்ட் ஹில் என்பவர் அஞ்சல் முத்திரையை கண்டுபிடித்தார்.

ஏஞ்சல் அருவி வெனிசுலாவில் அமைந்துள்ளது.