தமிழில் நட்பதிகாரம் 79 என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை தேஜஸ்வி மடிவடா. இவர் தெலுங்கில் மனம், ஸ்ரீமந்துடு, சுப்ரமணியம் பார் சேல், ஹார்ட் அட்டாக் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகின்றார்.
சென்ற ஆண்டு இவர் பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். இவர் சமீபத்தில் கூட “திரைத்துறையில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் தொடர்ந்து இருக்கின்றது. பாலிவுட் நடிகைகள் அதற்கு தயக்கம் காட்டுவதே இல்லை. எனவேதான் அவர்களுக்கு படவாய்ப்புகள் அதிகமாக கிடைக்கின்றன.” என்று கூறி சர்ச்சையை கிளப்பி இருந்தார்.
எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம். தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார்.