கரண்ட் பில் கட்டணம் இத்தனை லட்சமா! அதிர்ச்சியான கோ நடிகை

கொரோனா ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் முடக்கம், வேலை இழப்பு, வருமானம் இல்லாமையால் பல குடும்பங்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளன.

அண்மையில் நடிகர் பிரசன்னா மின்வாரியம் சரியாக ரீடிங் எடுப்பதில்லை, கரண்ட் கட்டணம் வெகுவாக உயர்ந்துள்ளது என பல குற்றச்சாட்டுகள் முன்வைத்தார்.

இந்நிலையில் நடிகை ராதவின் மகளும் கோ பட நடிகையுமான கார்த்திகா நாயர் தற்போது இது என்ன விதமான ஊழல், ஜூன் மாதம் கரண்ட் பில் கட்டணம் 1 லட்சமா, என குற்றம் சாட்டியுள்ளார்.

கார்த்திகாவுக்கு அடுத்ததாக அருண் விஜய்யுடன் நடித்துள்ள வா டீல் படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.