தளபதி விஜய் தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகராக மாறியுள்ளார். சமீபத்தில் இவரின் பிறந்தநாளை அவரின் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினர்.
மேலும் இவரின் மாஸ்டர் திரைப்படமும் ஊரடங்கு முடிந்தவுடன் வெளியாக தயாராக உள்ளது.
இந்நிலையில் தமிழ் சினிமாவிற்கு பல நல்ல திரைப்படங்களை கொடுத்தவர், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜீவா.
இயக்குனர் ஜீவா தளபதி விஜய்யை வைத்து Misson Impossible போல் திரைப்படம் இயக்க நினைத்துள்ளார். இது குறித்து தளபதி விஜய்யுடனும் பேசியுள்ளார்.
மேலும் நடிகர் விஜய்யும் அதற்கு ஓகே கூறியுள்ளார். ஆனால் இயக்குனர் ஜீவா எதிர்பாராத வகையில் உயிரிழந்து விட்டார்