பொலிஸ் தாக்குதலில் இளைஞர் திடீர் மரணம்: காரணம் என்ன?

கர்நாடகா பொலிசாரால் தாக்கப்பட்டு 19 வயது இளைஞன் மரணமடைந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் பிஜாப்பூர் மாவட்டத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது, 19 வயதான சாகர் என்ற இளைஞரை பொலிசார் லத்தியால் அடித்ததில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் SSLC கணக்கு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தனது நண்பருக்கு உதவுவதற்காக சாகர் விடைத்தாள்களை தூக்கி எறிந்ததாகவும், பணியில் இருந்த ஆசிரியர் அதை பார்த்து விட்டதால் தப்பிச் செல்ல முயன்ற போது தடுக்கி விழுந்து உயிரிழந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனை மறுத்துள்ள சாகரின் குடும்பத்தினர், தனது தங்கையை இறக்கிவிடுவதற்காக சாகர் சென்றதாகவும், எவ்வித முறைகேட்டிலும் சாகர் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சாகரின் உடலை பிரேத பரிசோதனைக்காக பொலிசார் அனுப்பி வைத்துள்ளனர், அறிக்கை வந்த பின்னரே உண்மை வெளிவரும் என தெரிகிறது.