பிக் பாஸ் மூலம் தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார்.
நேற்று இவருக்கும் பீட்டர் பால் என்பவருக்கும் கிறிஸ்தவ முறைப்படி கோலாகலமாக, வனிதாவின் வீட்டில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் திருமணத்தின் முன்பு தனது மகன் நினைவாக வனிதா புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில் சில ஆண்டுகளுக்கு முன் தனது மகன் விஜய் ஸ்ரீஹரி பிறந்தநாளுக்கு தளபதி விஜய் தன் மனைவி சங்கீதாவுடன் வந்து சர்ப்ரைஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கடந்த வாரத்தில் விஜய்யின் பிறந்தநாளுக்கு மறுநாள் வனிதா பதிவிட்ட இப்புகைப்படங்கள் தற்போது தீயாய் பரவி வருவதையடுத்து, விஜய் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியிலும் இருக்கின்றனர்.