வனிதாவுக்கும், பீட்டருக்கும் திருமணம் ஆன அடுத்த நாளே பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் பொலிசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
பிரபல நடிகை வனிதா விஜய்குமாருக்கும் – திரைப்பட இயக்குனர் பீட்டர் பவுலுக்கும் நேற்று கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.
வனிதாவுக்கு இது மூன்றாவது திருமணமாகும், தனது இரண்டு மகள்கள் முன்னிலையில் பீட்டரை வனிதா கரம் பிடித்தார்.
இந்த நிலையில் பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், எனக்கும் பீட்டருக்கும் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
நாங்கள் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம்.
என்னிடம் விவாகரத்து வாங்காமல் பீட்டர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார் என புகாரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கையில், பீட்டர் வனிதாவை திருமணம் செய்யும் வரையில் காத்திருந்து தற்போது எலிசபெத் புகார் கொடுத்தது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளனர்.