விக்ரம் நடித்து வரும் 58வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை கூடிய விரைவில் முடித்து விட்டு அடுத்ததாக விக்ரம் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார்
அஜய்ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதிஷெட்டி நடித்து வருகிறார்.
மேலும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 7 விதமான வெவ்வேறு விக்ரம் கொண்ட அட்டகாசமான போஸ்டர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருந்தது.
அதுமட்டுமின்றி இப்படத்தில் 20 விதமான கெட்டப்புகளில் விக்ரம் நடிக்கிறாராம். இந்நிலையில் சற்றுமுன் “தும்பி துள்ளல்” என்ற இப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் லிரிகள் வீடியோ யூடுயூப்பில் வெளியாகியுள்ளது. ஷ்ரேயா கோஷல் மற்றும் நகுல் அபயங்கர் இணைந்து பாடியுள்ள இப்பாடலுக்கு விவேக் மற்றும் ஜிதின் ராஜ் இணைந்து பாடல் வரிகள் எழுதியுள்ளனர். இதோ அந்த பாடல் லிங்க்…
Presenting the @arrahman delight ❤️❤#ThumbiThullal from #Cobra ➡️ https://t.co/bG3xrTu5Wu#ChiyaanVikram @AjayGnanamuthu @Lalit_SevenScr @SrinidhiShetty7 @SonyMusicSouth @JioSaavn @shreyaghoshal @NakulAbhyankar @Lyricist_Vivek #Jithin #CobraOnJioSaavn pic.twitter.com/5N2D6MzU2m
— Seven Screen Studio (@7screenstudio) June 29, 2020