பிரபல பாடகி ஜானகி அம்மாவுக்கு என்ன ஆச்சு!

ஊரு சனம் தூங்கிடுச்சு, ஒரு சந்தனக்காட்டுக்குள்ளே, ஒரு கிளி உருகுது என எத்தனையோ பாடல்களை தமிழில் பாடி அனைவரின் மனதையும் கட்டிப்போட்டவர் பாடகி ஜானகி. 17 மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

குரலை வைத்து பாடல்கள் பாடும் போது அவர் காட்டும் வித்தை என்றும் ரசிக்கும் ரகம் தான். வயது முதிர்வு காரணமாக பாடுவதை நிறுத்திக்கொண்டார்.

இந்நிலையில் நேற்று அவர் காலமானதாக தகவல் சுற்றி வந்தன. இது குறித்து அவரின் மகன் முரளி கிருஷ்ணா அம்மாவுக்கு சிறிய ஆப்ரேசன் ஒன்று நடைபெற்றுள்ளது. அவரின் உடல் நிலை சீரான முன்னேற்றத்தில் இருக்கிறது.

தயவு செய்து தவறான செய்திகளை பரப்பாதீர்கள். அம்மா நலமாக இருக்கிறார் என்று கூறீயுள்ளார்.

மேலும் இசையமைப்பாளர் தீனா, பாடகர் எஸ்.பி.பியிடம் கேட்ட போது, ஜானகி நலமாக இருக்கிறார் என்றும் தன்னை 6 முறை கொன்றுவிட்டார்கள் என சிரித்தபடி கூறினாராம்.