என் மகனை வைத்துகொண்டே இதையெல்லாம் செய்தார்கள்?.

நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் ஜீன் 27-ம் திகதி அவரது வீட்டிலேயே எளிமையான முறையில் கொண்டாட்டமாக நடைப்பெற்று முடிந்தது.

இந்தநிலையில், வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, பீட்டர் பால் மனைவியை விவகாரத்து செய்யாமலேயே இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட விஷயம் பெரும் பூகம்பத்தையே தற்போது ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவரது மனைவி சமீபத்தில் அளித்த பேட்டியில், என் கணவருக்கு சரியான வருமானம் கிடையாது, அவருக்கு வேலை செய்யும் இடத்தில் எல்லாம் பழக்கம் இருக்கிறது.

திருமண செய்தியை அறிந்து நான் கேள்விப்பட்ட போது நான் அறிந்து நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், காவல் நிலையத்திலேயே வனிதாவை பற்றி உனக்கு தெரியாதாம இன்னும் 6 மாசமோ ஒரு வருசமயோ தொரத்திவிட்ற போறாங்கனு சொன்னாங்க.

மேலும், என் கணவரிடம் எனக்கு விவாகரத்து தறாமல் எப்படி திருமணம் செய்துகொள்வீர்கள் என்று கேட்டேன். மேலும், போலீஸ் நிலையத்திலும் நான் முறைப்படி விவாகரத்து பெறாமல் நான் நான் செய்து கொள்ள மாட்டேன் என்று எழுதி வாங்கி கொண்டார்கள்.

ஆனால், அதை என்னிடம் கொடுக்கவில்லை. நானும் நம்பிவிட்டு விட்டேன். ஆனால், அதை எல்லாம் மீறி எந்த தைரியத்தில் கல்யாணம் பண்ணார் என்று கூறியிருந்தார்.

மேலும், இவர்கள் எல்லாம் திட்டமிட்டு ஏமாற்றி இந்த திருமணத்தை செய்து இருக்கிறார்கள். நான் ஒரு கோடி கேட்டேன் என்றும் கூறுகிறார்கள். நான் அப்படி கேட்டு இருந்தால் ஏன் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவில்லை.

எல்லாமே அவர்களே செய்துவிட்டு பலியை எங்க மேலே தூக்கி போடுறாங்க. என பீட்டர் பாலி மனைவி குறிப்பிட்ட காணொளியின் மூலம் அனைத்தையும் விளக்கியுள்ளார். மேலும், பீட்டர்பாலின் மகனும் அவர்களது புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.