தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் அதிகளவு நடைபெற்று வருகிறது. நாடகக்காதல் கும்பல்களால் பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாவதும், அரங்கேறிய பல கொடூர கொலைகளும் இன்றளவிலும் ஆறாத தழும்பாக மனதளவில் இடம் வருகிறது.
தமிழகத்தில் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் நாடக காதலன்களுக்கு சரிவர தண்டனையும் கிடைப்பதில்லை. பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் இறுதி வரை ஏமாற்றத்தை சந்திக்கும் சூழலே நிலவி வருகிறது.
தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி திருமுல்லைவாசல் பகுதியை சார்ந்தவர் சுபஸ்ரீ. இதே பகுதியை சார்ந்த காமுகன் உதயப்ரகாஷ். இவன் சுப ஸ்ரீயை காதலிப்பதாக கூறி பலமுறை காதல் தொல்லையும், ஆபாசமாக பேசி தொல்லையும் செய்து வந்துள்ளான்.
இதனை ஏற்றுக்கொள்ளாத மாணவி விலகி செல்லவே, காமுகன் தொடர்ந்து நாடககாதல் தொல்லை அளித்து வந்துள்ளான். இந்நிலையில், பெண்மணியை புகைப்படம் எடுத்த கொடூரன், அதனை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவு செய்துள்ளான்.
மேலும், சுபஸ்ரீயின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினரை தாக்கிவிட்டு, சுபஸ்ரீ மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்து தப்பி சென்றுள்ளான். இந்த சம்பவம் கடந்த 24 ஆம் தேதியன்று நடந்த நிலையில், சுபஸ்ரீ அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாடககாதலால் பெண்கள் அனுபவிக்கும் துயரம் மற்றும் அரங்கேறும் கொலைகள் போன்றவை இன்றளவும் தொடர்ந்து வருகிறது. இது போன்ற குற்றத்தில் ஈடுபட்ட பலரும் சில மாதங்களில் ஜாமினில் வந்து, ஒரு வருடத்தில் நிரந்தர விடுதலை பெற்று வாழ்ந்து வருகின்றனர். பெண்களை பெற்றவர்கள் மட்டும் தங்களின் பிள்ளைகளை இழந்து, தங்களின் வாழ்நாட்களை கண்ணீருடன் கடத்தி வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டும் என்பதே பலரின் ஆதங்க குரலாக இருக்கிறது.