நகைச்சுவை நடிகர் ரமேஸ் கண்ணாவின் அழகிய மகன் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கடந்த வருடம் வெளிவந்த சர்க்கார் திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தார்கள். கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
மேலும் சர்காரில் பிரபல காமெடி நடிகர் ரமேஸ் கண்ணாவின் மகன் நடித்துள்ளார். காமெடி நடிகர் ரமேஷ் கண்ணாவின் மகன் ஜஸ்வந்த்தும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
ரமேஷ் கண்ணா இதற்கு முன் விஜய்யுடன் பிரண்ட்ஸ் படத்தில் நடித்திருப்பார். அதேபோல் அவரின் மகன் விஜயுடன் சர்கார் படத்தில் நடித்திருந்தது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ரமேஷ் கண்ணாவின் மகன் முருகதாசிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். முருகதாஸ் எப்பொழுதும் தான் ஒரு காட்சியிலாவது நடிப்பதோடு தன்னுடன் பணியாற்றும் உதவி இயக்குனர்களையும் ஒரு காட்சியில் நடிக்க வைத்து விடுவார்.
அதுபோலத்தான் சர்காரில் ஒரு சிறு காட்சியில் ரமேஷ் கண்ணாவின் மகன் நடித்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
குறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் ரமேஸ் கண்ணாவுக்கு இவ்வளவு அழகிய மகனா என்று வாயடைத்து போயுள்ளனர். அதிலும் பெண் ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது.