ஒரு நொடியில் நோய்கள் முற்றாக தீரணுமா? அப்படி என்றால் இதை சாப்பிட்டால் போதும்!

கடுகு சிறியதாக இருந்தாலும், அதில் பொதிந்துள்ள ஊட்டச்சத்து பெருசு. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அது போல ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது கடுகு.

திரிகடுகம் என்னும் 3 மருத்துவ பொருட்களில், முதல் இடம் கடுகிற்கு உண்டு. அதனால் தான் எல்லா குழம்புகளிலும் கடுகை தாளித்து சேர்க்கிறார்கள். கோடை காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது.

தாவரவியல் ரீதியாக பார்த்தால் புரோகோலியும், முட்டைக்கோசும் கடுகுக்கு சொந்தக்காரர்கள் என்று சொன்னால் நம்ப முடியாதுதான்.

இந்த தாவரம் பராசிகா காய்கறி குடும்பத்தை சேர்ந்தது. இந்த காய்கறிகள் அனைத்தும் தீவிரமான புற்றுநோய் எதிர்ப்புத்தன்மை கொண்டவை.

கடுகில் 40 வகைக்கு மேல் இருக்கின்றன. இருந்தாலும் அவற்றில் மூன்று வகை மட்டுமே பரவலாக பயிரிடப்படுகின்றன. கருப்பு கடுகு மத்திய கிழக்கு பகுதியையும், வெள்ளை கடுகு கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியையும், மஞ்சள் கடுகு இமயமலை பகுதியையும் தாயகமாகக் கொண்டவை.

கடுகை பற்றி 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வடமொழிப் புத்தகங்களிலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் தாளிப்பதற்கு கடுகு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த தாளிப்பு முறை வட இந்தியாவில் இருந்தே தென்னகம் வந்திருக்க வேண்டும். இன்றைக்கு வட இந்தியாவில் கடுகு பரவலாக பயிரிடப்படுவது மட்டுமில்லாமல், கேழ்வரகுடனும் பயிரிடப்படுகிறது.

கடுகு விதை புற்றுநோய் எதிர்ப்புத்தன்மையை கொண்டிருப்பது மட்டுமல்லாமல் சிறுநீர் பிரிவதை அதிகரிக்கும், உடலுக்கு தேவையான வெப்பத்தை தரும், ரத்தஓட்டத்தை அதிகரிக்கும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்யும். செலெனியம், மக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், மாங்கனீஸ், பாஸ்பரஸ், தாமிரம், வைட்டமின்கள் சி, கே, பி வகை கடுகு மூலம் கிடைக்கின்றன.

வயதாவதை தவிர்க்க முடியாத ஒன்றாகும். வயதாவதை உங்களால் தடுக்க முடியாது. ஆனால் உங்கள் உணவில் கடுகை சேர்த்துக் கொள்வதன் மூலம் முதுமையைத் தாமதப்படுத்தலாம். கடுகு விதைகளில் வைட்டமின் ஏ, கே மற்றும் சி நிறைந்து காணப்படுவதால் இது வயதாகும் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.

கடுகு விதைகளில் குளுக்கோஸினோலேட்ஸ் மற்றும் மைரோசினேஸ் ஆகிய கலவைகள் நிறைந்துள்ளது. இது உடலில் கேன்சர் உருவாகக் காரணமான செல்களின் வளாச்சியைத் தடுக்கிறது.

ஹீயுமன் அண்டு எக்ஸ் பிரிமெண்டல் டாக்ஸிகாலஜி என்கிற பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி இந்த சின்னஞ்சிறிய விதைகளில் புற்றுநோயைக் காரணிகளின் பாதிப்புகளுக்கு எதிராக பாதுகாக்கிறது என்று தெரிவிக்கிறது.

பற்களை வலிமையாக்க: கடுகில் செலினியம் என்கிற மினரல் நிறைந்திருப்பதால் உங்கள் எலும்புகளுக்கு இது மிகவும் நல்லது. இது உங்கள் எலும்புகளை உறுதியாக்குகிறது, மேலும் கடுகு உங்கள் நகங்கள், தலைமுடி மற்றும் பற்களுக்கு வலிமை சேர்க்க உதவுகிறது.

கடுகில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் ஆன்டி இன்ப்ளாமேட்டரி மூலக்கூறுகள் அடங்கியுள்ளது. இது ஈறுகள் எலும்புகள் மற்றும் பற்களில் ஏற்படும் வலியை குறைக்க உதவுகிறது.

விஷத்தை கட்டுப்படுத்தும்: தற்கொலை எண்ணத்தோடு விஷம், பூச்சிமருந்து அருந்தியவர்களுக்கு இரண்டு கிராம் கடுகை நீர்விட்டு அரைத்து கொடுத்தால் உடனடியாக வாந்தி ஏற்படும். இதனால் விஷத்தின் தாக்கம் கட்டுப்படும்.

கடுகு விதையும் கடுகு எண்ணெயும் அவற்றுக்கே உரிய சுவை, நறுமணத்தை எல்லா உணவுக்கும் வழங்கக்கூடியவை.