ஓவர் நைட்டில் ஒபாமா ஆனவர்கள் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். அது இந்தியாவில் இருக்கும் இவருக்கு கட்டாயம் பொருந்தும். அவர்தான் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். மலையாளத்தில் உருவான ஒரு அடார் லவ் என்ற படத்தில் வரும் கண்ணடிக்கும் காட்சியின் மூலம் தென்னிந்திய சினிமாவில் ஃபேமஸ் ஆகிவிட்டார்.
தற்போது இரண்டு இந்திப் படங்களில் பிரியாவாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து இருக்கின்றார். இவர் மறைந்த முன்னாள் நடிகையான ஸ்ரீதேவியின் பெயரில் நடித்த திரைப்படம் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
இந்த நிலையில் மீண்டும் மலையாளத்தில் ஒரு சர்ச்சை கதாபாத்திரத்தை அவர் ஏற்கிறார். 40 வயதான ஆணை, 21 வயது பெண் காதலிப்பது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருக்கிறாராம். பிரியாவாரியர் இந்த கதையை கேட்டு முதலில் மறுத்துவிட்டாராம்.
ஆனால், சம்பளம் அதிகமாக கொடுக்கிறேன் என்று கூறவும் சரி என்று நடிக்க ஒப்புக்கொண்டாராம். இந்த படத்திற்கு சமுதாய சீர்கேடு என்று பலரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். பிரியா வாரியரின் ரசிகர்களோ காசுக்காக இப்படி எல்லாமா செய்வது என்று அப்செட்டில் இருக்கிறாராம்.